திருக்குர்ஆன் தமிழில் படிக்க

அவசரகால ஊர்தி

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

மேலேவீதி மஸ்ஜிதே நூர்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

மஸ்ஜிதே ரஹ்மத்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

அன்னை ஹத்திஜா மகளிர் உயர்நிலைபள்ளி

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

கிழேவீதி ஜாமியா மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, August 8, 2012

முக்கிய இணையதளங்கள்!

Certificates:
1. Birth Certificate
2. Caste Certificate 
3. Tribe Certificate 
4. Domicile Certificate 
5. Driving Licence 
6. Marriage Certificate 
7. Death Certificate 
Apply for:
1. PAN Card
2. TAN Card
3. Ration Card 
4. Passport
5. Inclusion of name in the Electoral Rolls 
6.e-Scholarship for  Minority Students
Register:
1. Land/Property
2. Vehicle 
3. With State Employment Exchange 
4. As Employer 
5. Company 
6. IN Domain 
7. GOV.IN Domain
Check/ Track:
1. Waiting list status for Central Government Housing
2. Status of Stolen Vehicles 
3. Land Records 
4. Cause list of Indian Courts
5. Court Judgments
6. Daily Court Orders/Case Status
7. Acts of Indian Parliament
8. Exam Results
9. Speed Post Status 
10. Agricultural Market Prices Online 
Book/ File/ Lodge:
1. Train Tickets Online
2. Air Tickets Online 
3. Income Tax Returns 
4. Complaint with Central Vigilance Commission
Contribute to:
1. Prime Minister's Relief Fund
Others:
1. Send Letters Electronically
Recently Added Online Services:
1. Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages
2. Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu 
3. Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu 
4. Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli 
Global Navigation:
1. Citizens
2. Business (External website that opens in a new window)
3. Overseas
4. Government
5. Know India
6. Sectors 
7. Directories 
8. Documents 
9. Forms
10. Acts
11. Rules 
12. Schemes 
13. Tenders
14. Home
15. About the Portal
16. Site Map
17. Link to Us
18. Suggest to a Friend
19. Help
20. Terms of Use
21. Feedback
22. Contact Us

Learn English
www.english-at-home.com
www.freelanguage.org
www.bartleby.com
www.effortlessenglishclub.com/7-rules-to-learn-execellent-english-speaking
http://www.e-book.com.au/freebooks.html
www.edufind.com/ENGLISH/grammar/INDEX.CFM
www.esldepot.com/section.php/5/0
www.mobipocket.com/en/eBooks/Category.asp?Language=EN&categoryId=89&Name=Language+%26+Linguistics
www.ebook300.com/The-Cambridge-Encyclopedia-of-the-English-Language6673.html
www.ebooksbay.org/Free_Learning_English_Ebooks_Download_Free_Language_ebooks/2008/01/06/
www.english-test.net/esl/english-grammar-test.html

குழந்தைகளுக்கான இணையதளங்கள்
இந்திய ரயில் விபரம் 
இந்திய வங்கிகள் விபரம் 
இந்திய பாஸ்போர்ட் விபரம் 
இந்திய மனித உரிமைகள் ஆணையம் 
இந்திய பெண்கள் நல ஆணையம் 
இந்திய தகவல் அறியும் உரிமை ஆணையம் 
இந்திய பல்கலைக்கழக மான்யக் குழு 
இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 
இந்திய மருத்துவக் கல்விக் குழு 
இந்திய செவிலியர் கல்விக் குழு 
இந்திய விடுதி மேலாண்மை & உணவுக் குழு 
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழு 
இந்திய மறுவாழ்வுக் குழுக் கல்வி 
இந்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம் 
இந்திய மேல்நிலைக் கல்வித் துறை 
இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
இந்திய ரயில் பணியாளர்கள் தேர்வாணையம் 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
தேசிய ஆசிரியர் கல்விக் குழு 
இந்திய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 

மனித நேயம் IAS ACADEMY
UPSC GUIDE
UPSC EXAM
பிற கல்வி தளங்கள்! 
வேலைவாய்ப்பு தளங்கள்! 
மருத்துவ தளங்கள்! 

TAMILNADU UNIVERSITIES

Alagappa University (Karaikudi).
Annamalai University (Annamalainagar)
Anna University (Chennai)
Avinashilingam Institute for Home Science & Higher Education for Women (Coimbatore).
Bharathiar University (Coimbatore)
Bharathidasan University (Tiruchirapalli).
Dakshina Bharat Hindi Prachar Sabha (Chennai)
Gandhigram Rural Institute (Gandhigram).
Indian Institute of Technology Chennai (Chennai)
Madurai Kamraj University (Madurai).
Manonmaniam Sandaranar University (Tirunelveli).
Mother Teresa Womens University (Kodaikanal)
Periyar University
Sri Chandrasekharendra Saraswathy Viswa maha Vidyalaya (Kancheepuram).
Sri Ramachandra Medical College & Research Institute (Chennai).
Tamil Nadu Dr.Ambedkar Law University
Tamilnadu G D Naidu Agricultural University (Coimbatore).
Tamil Nadu Veterinary & Animal Sciences University (Chennai).
Tamil University (Thanjavur).
The Tamil Nadu Dr M G R Medical University (Chennai).
University of Madras (Chennai)


Wednesday, February 15, 2012

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை – 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை – 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் – சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் – சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி – 614 207
14. டாம்கோ 807, – அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை – சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18
நன்றி: அஹமது ரிதாருதீன்

Thursday, October 13, 2011

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?


எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான். 

    மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் காசு, பணங்கள் மட்டும்தான் உலக வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை அஸ்திவாரம் என்ற தவறான ஒரு மனக்கணக்கு. இதன் கேட்டை உணராமல் இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் தினந்தோறும் மனிதனுடைய வாழ்வில் பெரும் போராட்டங்கள் உத்தரவாதமில்லாத தன் உயிரின் இரகசியத்தை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லாத மனித இனம்; படைத்தவன் பறிக்க நாடினால் தடுக்க வழியில்லாத உயிரின் இரகசியம் படைத்தவனுக்கே வெளிச்சம். அவனையும் மறந்து உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடைபோடும் மனித இனம். இத்தகைய நிராகரிபோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் கீழ்கண்ட அல்குர்ஆன் வசனங்கள்.
    அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.[23:55,56]  
    இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? [26:129]  
    ‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]  
    மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் [8:50,51]   
    உடலில் உலவிக் கொண்டிருக்கும் ஆவி அடங்கிப்போனால் எத்தனைப் புகழோடும் வாழ்ந்தவனாகினும், கற்றறிந்த மேதையாகினும், நிபுணனாகினும், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாகினும், அல்லது சந்ததிகளை அதிகமாக அடைந்தவனாகினும் அவன் உயிரை மலக்குகள் கைப்பற்றிச் செல்லும்போது அவனது புகழோ, மேதையோ, நிபுணத்துவமோ செல்வங்களோ, சந்ததிகளோ எந்தப்பயனும் அளிக்காது. அவன் உயிரை மீட்டுத்தரவும் முடியாது.
    அவனுடைய உடலை மூட வேண்டுமானால் கஃபன் துணி தயாராக இருக்கும். தூக்கிச் செல்ல நாற்சக்கர வண்டியோ அல்லது யாரோ நால்வர் தூக்கிச் சென்று புதைகுழியில் வைக்கத் தயாராய் இருப்பார்கள். உள்ளே வைத்தவுடம் அனைவரும் விலகி விடுவர். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவன் மட்டுமே தகுதியானவனாக இருப்பான். இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்த உண்மை முஸ்லிம் தக்க பதிலைக்கூறி புது மாப்பிள்ளையைப்போல கியாமநாள் வரை நித்திரையில் மூழ்கியிருப்பான். இறைக்கட்டளைகளை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாதவனாக கபுரின் அதாபில் (கல்லறை வேதனை) மூழ்கி துன்பத்தை அனுபவிப்பான்.
    அதனால்தான் நபி(ஸல்) இரண்டு வஸ்துக்களுக்கு இந்த உம்மத்தார்மீது அதிகமாக பயந்தார்கள். “இச்சைக்கு வழிபடுவதும் நெடுநாள் உயிர்த்திருப்பதிலும் ஆதரவு வைப்பதுமான இந்த இரண்டு குணங்களைப் பற்றி நான் பயப்படுவதுபோல் வேறு எந்த வஸ்துவைப் பற்றியும் உங்கள் மீது நான் அவ்வளவாக பயப்படுவதில்லை” என்று கூறினார்கள்.
    நபி(ஸல்) அவர்களின் கூற்று உண்மையாக இன்று ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதை நோக்கி செல்கிறது என்று பார்த்தால் இறைவனாலும், இறைத்தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஹராமான எந்த வழியிலும் இன்று 1000 சம்பாதிப்பவன் நாளை 50000 சம்பாதிக்கத் துடிக்கிறான். இவ்வாறு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திலிருக்கும் மனிதன் வரை 2 கோடிக்கு சொந்தக்காரன் அதை 10 கோடியாக்க என்ன வழி? அதற்காக கொடுக்கல் வாங்கலில் துரோகம் செய்வதும், அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அல்லது பொதுச் சொத்தை அபகரிப்பதும் அதையும் மிஞ்சி சொத்து சேர்ப்பதில் இடையூராக இருப்பவனைக் கொலை செய்யக்கூட அஞ்சாத உள்ளம். இருண்ட வாழ்க்கையின் இச்சையை நோக்கி செல்லும் மட்டரகமான அறிவு; இறைவன் அளித்ததைக் கொண்டு திருப்தியுறாத உள்ளம்; உலக இச்சையை தெய்வமாக்கிக் கொண்டது. தன்னுடைய அந்திய காலத்தில் தலை ஆடி கால் தடுமாறி சுகம் கெட்டப் பின்பும் மருத்துவரை நாடி உடல் நலம் பேண ஆசை. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
    மனிதனுக்கு வயது ஆகஆக அவனில் இரு செயல்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒன்று பொருள் மீது பேராசையும், இரண்டு வயதின்மீது பேராசையும்தான் அவை. அனஸ்(ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதி 
    இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக பேணாமல் கலிமாவை உறுதிப்பாடில்லாமல் வாயளவில் ஒப்புக்கொண்டு தொழுகையை சரிவர பேணாமல், வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகை தொழுதால் போதும் என்றும், நோன்பை பேனாமலும், ஜகாத்தை முறையாக கொடுக்காமலும், ஹஜ்ஜுடைய காலங்களில் வசதி வாய்ப்பையும் பெற்றும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவைகளை மார்க்கமாக எண்ணி ஊரறிய செய்து வழி அறியாதவன் திசைமாறி செல்வதைப்போல் உலக வாழ்வில் மூழ்கி குஃப்ரைத் தேடிக்கொள்கின்றனர்.
    அல்லாஹ் மனிதனுடைய உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைகளுக்கும், வசிக்கும் வீட்டைப் பற்றியும் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான். ஹராமான வழியில் ஈட்டிய பிற சொத்துகளுக்கு உங்கள் மீது விசாரணை செய்வான். அந்த நேரத்தில் கைசேதப்பட்ட மக்களில் நாமும் ஒருவராகி விட வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
    உதாரணமாக நம்ரூத் என்பவன் மிகப்பெரிய அளவில் தேசங்களை ஆண்டான். அவன் அல்லாஹ்விற்கு எதிராக பல சவால்களை விட்டான். மேலும் சுவனபதியின் வருணனைகளை கேள்விப்பட்டு நான் ஒரு சுவர்க்கத்தை அமைத்துக் காட்டுகிறேன் என்று நிறைய செல்வங்களை திரட்டி சொர்க்கத்தை போல ஒன்றை அமைத்தான். ஆனால் அதில் அவன் பிரவேசிக்கும்போது அவனுடைய உயிரை மலக்குகள் வந்து கைப்பற்றி சென்றனர். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையின் ஆணிவேர் பறிக்கப்பட்டு மாண்டு போனான்.
    அவ்வாறே மூஸா(அலை) அவர்களுடைய சமூகத்தில் காரூன் என்பவன் வாழ்ந்தான். அவன் அந்த சமூகத்தாரின் மீது அட்டூழியம் செய்தான். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் அளித்ததின் காரணமாக அச்செல்வங்கள் அவன் கண்ணை மறைத்துவிட்டன. அவனுடைய கஜானா சாவியை சிரமத்துடன் சுமந்து செல்லும் அளவில் இருந்தது(28:76) அதனால் அவன் கர்வத்துடம் தனது சமூகத்தாரிடம் நடந்து கொண்டான். இன்னும் இவை அனைத்தும் என்னுடைய அறிவின் வல்லமையால் நான் சம்பாத்தித்தவை என்று கூறி கர்வமடித்தான்.
    அவனுடைய சமூகத்தார் இவனை மிகவும் பெரும் அதிஷ்டசாலி என்றும் கூறினர். ஆனால் அல்லாஹ்வின் வேதனையில் அகப்பட்டு அவனும், அவனுடைய செல்வங்களும், வீடுகளும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனைப் பெரும் அதிஷ்டசாலி என்று கூறிய அவனுடைய சமூகத்தார் அவனுடைய பேரழிவை கண்டு அல்லாஹ்வின் கிருபை இல்லாதிருந்தால் நாமும் இவ்வாறே அழிந்திருப்போம் என்று கூறினார்கள்.
    இன்று  சில பகுதிகளில் தொழுகையப் பேணக்கூடிய முஸ்லிம்களில் சிலர் மறைமுகமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றான். வழிதவறி வந்த செல்வங்களை வழிதவறியே வெளியேற்றிவிட அல்லாஹ் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெªடிளியினால் ஆக்கியிருப்போம்.
    அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). 
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக்கொடுத்திருப்போம்) ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். [43:33-35]   
    அதனால்தான் உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள். “இப்னு உமரே நீர் காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் நான் மாலை வரை உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. மாலையானால் நாம் காலையில் உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. உயிர்வாழ்தில் மரணத்துக்கு வேண்டிய ஆவணங்களை தயார் செய்துகொள். நாளை கியாமத்தில் அல்லாஹ்விடன் உன் நிலை எப்படியிருக்குமோ உனக்குத் தெரியாது” என்று அறிவுரை கூறினார்கள்.
இந்த அறிவுரையை ம்னதில் கொண்டு ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி செல்வநிலை அடைந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதை மக்களுக்கும் உதவி புரிந்து அழிவில்லா நிலையான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ஆக்கிக்கொள்ளவும் நம்ரூது, காரூனின் நிலையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.
நன்றி :www.readislam.n

விதியைப் பற்றி திருமறை ஹதீஸ்


நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன் 54-49
வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி
மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி
விதி என்பது கிடையாது மதியைக் கொண்டு விதியை வென்று விடலாம் என்று கூறுபவர்களுக்கு மேற்காணும் திருமறையும் நபிமொழியும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
மனிதன் நிலையினை அல்லாஹ் தெளிவுபட விளக்குகின்றான் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் மனிதனோ தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு எல்லாம் என் அறிவாற்றலால் வந்தது என்று பெருமையடித்துக் கொண்டு அலைவதை காண முடிகிறது.
அல்லாஹ் தன் திருமறையில்
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை. அல்குர்ஆன் 64-11
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். அல்குர்ஆன் 57-22. இவ்வாறு திருமறை தெளிவாக கூறுகிறது.
மனிதன் எத்தகைய காரியங்கள் செய்தாலும் அல்லாஹ்வே அவனை செயல்படுத்துகிறான் என்பதை நபி அவர்களின் பொன்மொழிகள் சான்று பகர்கின்றன.
அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.
கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி
அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள்.
அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி
விதிதான் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதே என்று கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுவோம்! விதிப்படி நடக்கட்டும் என்று கூறிக்கொண்டு செயல்படலாகாது. அதற்குத்தான் நபி அவர்கள் கூறினார்கள், எதற்காக படைக்கப்பட்டுள்ளோமோ அவற்றையே செய்ய வேண்டும். நாம் படைக்கப்பட்டதின் நோக்கம் இறைவணை வணங்க வேண்டும். மற்றும் உள்ள அன்றாட வேலைகள் மனிதனுக்கு ஏவப்பட்டுள்ளதை நல்லவைகளை மட்டுமே செய்யவேண்டும்.
இதைவிட்டு விதிதான் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதே என்று தன் விருப்பத்திற்கு செயல்படுவதுதான் ஷைத்தானின் சூழ்ச்சியில் பின்னப்படுவதாகும். இறைவன் விதித்த விதி மரணத்தை தவிர மற்றவைகளை மாற்றுவதற்குறிய வழிமுறைகளை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2-186
(அவனை) நாடுபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். அல்குர்ஆன் 42-13
இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களை பிரார்த்தனை மூலம் கேட்கச் சொல்கிறான்.
பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி
பிரார்த்தனை எனும் பெயரில் வரம்பு மீறி கேட்டுவிட்டு எனது பிரார்த்தனைக்கு பயனில்லையே என்று மன வெறுப்பு அடைந்திடக்கூடாது. அல்லாஹ் “நான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துவேன் என்ற வசனத்தை மறந்துவிடக்கூடாது.
மேலும் ஒருவர் தமக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் மட்டுமே இருக்கும் அளவிற்கு நல்ல செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று கெட்ட செயல்களை செய்து முடிவில் நரகில் நுழைவர்.
இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி
மேற்காணும் ஹதீஸின்படி இறைவன் சொர்க்கத்திற்குரியவர்களையும், நரகத்திற்குரியவர்களையும் நிர்ணயம் செய்து விட்ட போதிலும் நல்வழியின் மூலமாகவும், பிரார்த்தனையின் மூலமாகவும் நரகவாசி என்ற நிலையில் உள்ளவர் விதியை வென்று சொர்க்கவாசியாக மாறிவிடலாம். என்பதனை இந்த ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது. ஆயினும் இதுவும் அல்லாஹ்வின் அறிவுக்கு உட்பட்டதே என்பதை மறுக்க வேண்டாம்.
எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான். அல்குர்ஆன் 19-76
என்று அல்லாஹ் திறுமறையில் கூறுவதுடன்
(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது. அல்குர்ஆன் 13-39 என்று விளக்குகிறான்.
“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன். அல்குர்ஆன் 20-82
என்று திருமறையில் இறைவன் கூறுவதிலிருந்தே நாம் உணர்லாம். ஒருவன் தவறான வழியில் சென்று, பிறகு மனம் திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் அவனை அல்லாஹ் மன்னிப்பதாக கூறுகிறான். இருள் சூழ்ந்த உலகினில் வாழ்கின்றவர்களுக்கு ஒளியாக திகழ்வது திருமறையும், நபிவழி எனப்படும் ஹதீஸும்தான். இவற்றை பின்பற்றி நடந்தாலே நேர்வழி பெற்றவராக திகழ முடியும்.
ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றது. எனினும் அவர்களது பெற்றோர்களின் நிலையினால் அதைல் பின்னி பினைந்து விடுகின்றனர். அதனால்தான் எல்லா மக்களிடமும் குர்ஆன், ஹதீது போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நல்வழியில் செல்வதற்கு விதி அமைந்துவிடும். இவற்றைத்தான் நபி அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளின் செயல்களை செய்பவர்கள் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவர் என்றார்கள்.
மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி
ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுது இறைவனுக்கு பயந்து “இறைவா நான் செய்யக்கூடிய செயல்கள் நேர்வழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களிலேயே செய்தால் அல்லாஹ் விதியை மாற்றி நேர்வழியாக தருவான் என்று தன் திருமறையிலேயே அல்குர்ஆன் 42:13ல் கூறுகிறான்.
ஏனெனில் இதுகூட பிரார்த்தனையே ஆகும். மதியைக் கொண்டு விதியை வென்று விடலாம் என்று கூறுபவர்களும் தனது அறிவால் உயர்ந்தேன் என்று பெருமை பேசுபவர்களும் திருமறையின் வசனங்களையும், நபி அவர்களின் பொன்மொழிகளையும் ஆராய்ந்து பார்க்கவும். அவர்களுக்கு தெளிவான விடை இதில் கிடைக்கும். விதி இறைவனின் முத்திரைதான் என்ற முடிவு கிடைக்கும்.
நன்றி :www.readislam.n

Wednesday, October 12, 2011

ஒரே சமயத்தில் ஜந்துமொழிகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு

ஒரே சமயத்தில் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்களை அறியலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
இதனை உங்கள் கணணியில் நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.
அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.
தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்குநாம் கமெராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும்.
இதனால் அப்படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.
எனவே புகைப்படங்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக் கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்து கொள்ளலாம்.
1. Paint ஐப் பயன்படுத்துதல்: Paint ஐத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [Strat--> All Programs --> Accessories --> Paint ]
இதிலே File இனுள் Open என்பதன் மூலம் நீங்கள் அளவைக் குறைக்க எண்ணும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் திறந்து கொண்ட படத்தினை சேமிக்க(Save) வேண்டியதுதான்.[Ctrl +S]
இப்பொழுது உங்கள் படத்தின் அளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால் அதிகளவான படங்களை செய்வது மிகுந்த சிரமமாயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு படமாகவே செய்துகொள்ள வேண்டும்.
2. MS OFFICE Picture Manager ஐப் பயன்படுத்தல்: இதனைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [ Start --> All Programs --> Microsoft Office --> Macrosoft Office 2010 Tool--> Microsoft Office Picture Manager ]
இப்பொழுது Microsoft Office Picture Manager இனது வலப்பக்கத்தில் “Add a new picture shortcut” என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது தோன்றும் விண்டோவில் உங்கள் புகைப்படங்கள் உள்ள Folder ஐத் தெரிவுசெய்து “Add” என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது அனைத்து புகைப்படங்களும் தோன்றும்.
“Ctrl + A” ஐக் கொடுத்து அனைத்து புகைப்படங்களையும் தெரிவு செய்து “Edit Pictures” என்பதை கிளிக் செய்யவும்.
இதிலே “Resize” என்பதைக் கொடுக்கவும். பின்னர் “Document-Large (1024x768px)” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும். பின் படத்தை சேமித்துக் கொள்ளவும்.
உங்கள் புகைப்படங்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு சேமிக்கப்படும். சேமித்து முடிந்ததும் Microsoft Office Picture Manager ஐ மூடிக்கொள்ளவும். அவ்வளவுதான் உங்கள் புகைப்படங்களின் அளவு குறைக்கப்பட்டுவிடும்.

கணினியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு.நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.
இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.
இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.
உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites