திருக்குர்ஆன் தமிழில் படிக்க

அவசரகால ஊர்தி

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, August 29, 2011

மொபைல் போனில் நமது இணையதளத்தை தமிழில் பார்க்க விரும்புவோருக்கு..


இன்றைக்கு உலகம் செல்போனுக்குள் அடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு எல்லா வசதிகளும் செல்போனுக்குள்ளயே வந்துவிட்டது!GPRS என்று சொல்லப்படும் இணையதள பயன்பாடு செல்போனில் அறிமுகமானதிலிருந்து கத்தரிக்காய் என்ன விலை என்பதிலிருந்து நாசாவில் என்ன நடக்கின்றது என்பது வரை தெரிந்து கொள்ளும் அளவிற்கு செல்போனில் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது!
தமிழில் உள்ள இணையதளங்களை  நமது மொபைல் போனில் பார்ப்பதற்கு ஆசைப்படுவோம். ஆனால் மொபைல் போனில் பொறுத்தப்பட்டுள்ள ப்ரைசரில் தமிழ் இணையதளங்களை பார்ப்பதால் எழுத்துக்கள் சரியாக தெரியாது. மாறாக கட்டம் கட்டமாகவே எழுத்துக்கள் தோன்றும்!
ஏராளமான நமது சகோதரர்கள் http://mptpost.blogspot.com ஆகிய இணையதளங்கள் போனில் ஒபன் அகவில்லை என நம்மிடம் கூறிகின்றனர். மொபைல் போனில் எவ்வாறு நமது இணையதளத்தை தமிழில் சரியாக பார்ப்பது என்ற தகவலை நமது இணையதளத்ததை மொபைல் போனில் பார்க்க விரும்புவோருக்கும் தருகின்றோம்:
மிகவும் எளிமையான முறையில் நமது இணையதளத்தை நீங்கள் உங்கள் GPRS அல்லது இணையதள வசதி உள்ள மொபைல் போனில் பார்க்கலாம்.
உங்கள் மொபைல் போனில் பின்வரும் மென்பொருளை பதிவிறக்கும் செய்து நிறுவிக்கோள்ளுங்கள்
இந்த  மொபைல் ப்ரவ்சர் இலவசமாக கிடைக்கின்றது என்பது இன்னுமொறு சந்தோஷமான விஷயம்!
விண்டோஸ் மொபைல் உட்பட பெரும்பாளான மொபைல் போன்களில் வேலை செய்யக் கூடியது.
இதை உங்கள் மொபைல் போனில் நிறுவிய பிறகு அதன் மூலம் நமது இணையதளங்களை ஒபன் செய்து பாருங்கள் கணிணியில் பார்ப்பது போன்ற அனுபவும் உங்களுக்கு கிடைக்கும்!
இந்த ப்ரவ்சர் மூலம் நமது இணையதளங்கள் மட்டும் அல்ல தமிழ் யுனிகோடில் உள்ள எல்லா இணையதளங்களையும் நீங்கள் கணிணியில் பார்ப்பது போன்று தமிழில் பார்க்க முடியும்!
-வெப்மாஸ்டர்

Sunday, August 28, 2011

Advance Wish You Happy Eid Mubarak


அருகம்புல்



அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?

நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹோர்லிக்ஸ், ஓவல்டின், போன்ற பானங்களைஸ் சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன்  சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.

அருகம்புல்லை நிரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இத நோய்க்கு இதமளிக்கும்.

திடிரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும்,  அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

கூந்தலை நிறமூட்ட வழி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:42
சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். நான்கு நாளுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மின்னும். முடிக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் காற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்றே கருப்பு சாயலில் மின்னும்
.

மல்லிகைப் பூவின் மருத்துவ குணம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:37
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும். மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும். மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

தர்ப்பூசணியை சாப்பிடுங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:37
சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான். மலிவான விலையிலும், இணையில்லாத சுவையிலும் அமைந்திருக்கும் இந்த தர்ப்பூசணியை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணியை மிக எளிதாக நமக்குக் கிடைக்கிறது. உடலில் வரும் வேர்க்குரு மீதும் தர்ப்பூசணி நீரை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ப‌‌ற்களை‌ப் பாதுகா‌க்க

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:34
புதினா இலையைக் காயவைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல்துலக்கி வந்தால் பற்கள் பளிச்சென மாறும். எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பை சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும். பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்துத் தின்று வந்தால் பல்லில் உள்ள கறை நீங்கும். கேரட்டை சமைக்காமல் பச்சையாக உண்டு வந்தால் பற்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்
.

மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:34
மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் உலர்ந்த திராட்சை 60 கிராம், ஏலக்காய் 30 கிராம், சீரகம் 2 கிராம், வால் மிளகு அரை கிராம், ரோஜா இதழ்கள் 2 கிராம், கீழாநெல்லி வேர் 5 கிராம். இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து இடித்து நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, 100 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வேண்டும். மேலும் எளிதான வழியும் ஒன்று உள்ளது. அதாவது, உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, மலச்சிக்கல் தீரும். இவ்வாறு செய்து வர மலச்சிக்கல் குணமாகிவிடும்
.

திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:32
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும். திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும். உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும். சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

குங்குமப் பூவின் அரிய குணம்


ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:29
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

Saturday, August 27, 2011

போலியான மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு


[ புதன்கிழமை, 17 ஓகஸ்ட் 2011, 04:48.35 மு.ப GMT ]
நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.
ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது.
அவர்கள் கொடுக்கும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறாக மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.
இது போன்ற நேரத்தில் அந்த மின்னஞ்சல் முகவரி சரியானதா இல்லை வேலை செய்கிறதா, செயல் இழந்து விட்டதா என சுலபமாக கண்டறிய நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
இதனை அறிந்து கொள்ள நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு எதவும் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில் உங்கள் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் Verify Email பட்டனை அழுத்தியவுடன் கீழே நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா இல்லை போலியானதா என்ற முடிவு வரும். இவற்றை வைத்து மின்னஞ்சல் முகவரியை நாம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

கணினியில் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு


[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 04:38.29 மு.ப GMT ]
கணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான்.
இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும்.
விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிறது.

மனித மூளையை ஒத்த சிப்பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை


[ சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 04:38.50 மு.ப GMT ]
அறிவாற்றல் உடைய கணணி(cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி "சிப்" இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இச்சிப்பானது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது.
செயற்கை நுண்ணறிவின்(artificial intelligence) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது.
இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.

எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் அனிமேசன் படங்களை உருவாக்குவதற்கு


[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:38.36 மு.ப GMT ]
நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி எளிதாக நாமே அனிமேசன் உருவாக்கலாம்.
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஓன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஓடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஓன்லைன் மூலம் செய்யலாம்.
எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். வீடியோ அல்லது ஓடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள் உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு திறமையான கார்டூன் வடிவமைப்பாளர் உருவாக்குவது போல் எப்படி உருவாக்கலாம் என்பதையும் அழகுடன் காட்டுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: அமெரிக்க விஞ்ஞானி தகவல்


[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 01:40.39 பி.ப GMT ]
சிவப்பு கிரகம் என அழைக்கப்படுகிற செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக் கூடிய ஓக்சிஜன் பிராண வாயு இல்லை. இதனால் உயிரினங்கள் வாழ்வது என்பது இயலாது என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆனால் இந்தக் கருத்துக்கு மாறாக அமெரிக்க விஞ்ஞானி கிரெய்க் வென்டர் செவ்வாய் கிரகத்தில் செயற்கை உயிரினங்கள் வாழ முடியும் என அறிவித்து உள்ளார்.
தாம் செயற்கை உயிரிப் பொருளை உருவாக்கி உள்ளதாகவும், இந்த உயிரிப் பொருள் கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரிய மில வாயுவை எடுத்துக் கொண்டு உயிர் வாழும் எனவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிரகத்தில் 95 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயுதான் உள்ளது.
சர்சைக்குரிய உயிரியல் விஞ்ஞானி கிரெய்க் வென்டர் தமது குழுவினர் கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி உணவு, எரிபொருள் உற்பத்தி, பிளாஸ்டிக் தயாரிக்க செயற்கை செல்களை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
எக்சான் மொபில் நிறுவனத்துடன் இணைந்து மலிவான திறன் வாய்ந்த உயிரி உரு பொருளை உருவாக்கி கிரெய்க் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க் கிரகம் ரோமானியர்களின் யுத்த தேவதை ஆகும்.

இலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு


[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:48.33 மு.ப GMT ]
பரந்து விரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேறுபட்ட சேவைகளை இலவசமாக வழங்குகின்றது.
அவ்வாறான இலவச பயனுள்ள தளங்களில் சிறந்த தளங்களை மக்களின் விருப்ப தெரிவுகளோடு பட்டியல் படுத்துகிறது CATCHFREE.COM எனும் இணையம்.
இந்த தளத்தில் இணையங்களை பல்வேறுபட்ட தலைப்புக்களில் பட்டியலிடுகிறது. மிகப்பெரிய கோப்புக்களை அனுப்ப, முழுமையாக திரைப்படம் பார்க்க, குரல் அழைப்புக்களை மேற்கொள்ளல், இணைய வடிவமைப்பு, கணணி பாதுகாப்பு, ஓன்லைன் இசை, பயணசேவை, FUN, கல்வி, உடல் ஆரோக்கியம் என சுமார் 92 க்கு மேற்பட்ட தலைப்புகளில் இலவச தளங்களை தருகிறது.
அத்துடன் உங்களுக்கு வழங்கப்படும் பட்டியலில் ஒவ்வொரு தளத்தினையும் FACEBOOK நண்பர்கள் எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள், எந்த இயங்கு தளங்களில் செயல்படவல்லது, பாவனையாளர்கள் மதிப்பீடு என்பன போன்ற பல தகவல்களை தருகிறது.

Wednesday, August 24, 2011

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

 சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய 

http://pallikalvi.in/Students/Text%20Book.htm

Monday, August 15, 2011

அமெரிக்காவின் ரகசிய உளவு விமானத்தை ஆராய சீனாவுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்


[ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 04:04.16 மு.ப GMT ]
அபோதாபாத்தில் உள்ள ஒசாமா பின்லேடனின் வீட்டில் விழுந்த அமெரிக்க ரகசிய உளவு விமானத்தை ஆராய்வதற்கு சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் மேலும் விரிசல்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்த வீட்டில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலின் போது அமெரிக்க உளவு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் வளாகத்தினுள் விழுந்தது.
உளவு விமானங்களைக் கண்காணிக்கும் பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி இந்த உளவு விமானத்தின் உடல் பகுதியில் சில ரசாயனங்கள் பூசப்பட்டிருக்கும். அதனால் தாக்குதல் முடிந்த பின் விமானத்தின் அருகில் யாரையும் செல்லவிடக் கூடாது என அமெரிக்கா பாகிஸ்தானிடம் கோரியிருந்தது.
ஆனால் அமெரிக்கா தன்னிடம் சொல்லாமலேயே பின்லேடன் கதையை முடித்து விட்ட கோபத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை ஆராய்வதற்கு சீனாவை அழைப்போம் என முன்பே கோடிட்டுக் காட்டியிருந்தது.
சமீபத்தில் உளவு விமானத்தை நேரில் ஆராய்ந்த சீன அதிகாரிகள் அதன் உடல் பகுதியில் இருந்து சில மாதிரிகளை சேகரித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் கயானி ஆகியோர் மறுத்துள்ளனர். எனினும் இத்தகவல் உண்மை தான் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தி விட்டதாக சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீப காலமாக இருதரப்பு உறவிலும் ஏற்பட்ட விரிசலால் சீனா பக்கம் பாகிஸ்தான் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்கா உடனான உறவில் மேலும் விரிசலை உருவாக்கலாம்.

Friday, August 12, 2011

பெருநாள் தொழுகை



1) நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

3) நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலி ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா

4) நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
 
விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஈதுத் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ கிடையாது. ஈதுத் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தும் கிடையாது.

ஸதகத்துல் ஃபித்ர்


1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு போPத்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

2) நோன்பில் நகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்


3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ


4) நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி


விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தமை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!


சட்டங்கள்
கடமை: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பீன் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள். 
 

அளவு
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
 

நாள்
இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.

இஃதிகாஃப்


 
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை(வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி(ஸல்)அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

2) நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள. ஆதாரம்: புகாரி

3) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

விளக்கம்: இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கிவழி படுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு இல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். எவருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்


إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِوَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِلَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍتَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍسَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ.

நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவம்(ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி(நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)

1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2)ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

3) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று,இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.

அல்லாஹம்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?" என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல. நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள். "ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்" இப்படி கூறுவதினால் "ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும் என்பதுதான்.

பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது




1) நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக்கொள்வார்கள். ஆதாரம்: திர்மிதீ

2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவுத்

நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் குடித்தால்



1) (யாராவது) மறந்துபோய் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: யாராவது நோன்பு நேரத்தில் மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால் குற்றமில்லை. ஞாபகம் வந்ததும் சாப்பிடுவதை குடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய நோன்பு பரிபூரணமானதே. யார் வேண்டுமென்றே சாப்பிடுகின்றாரோ அல்லது குடிக்கின்றாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும், இன்னும் அது பெரும் குற்றமாகும். அந்த நோன்பைப் பிறகு நோற்க வேண்டும்.

நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்



أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَشَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஃபித்ராவாக ஒரு மிஸ்கீனுக்கு(ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். என்னும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)

1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர் நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி(ஸல்)அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

2) நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு யுத்தத்துக்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்கு சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரைச் சூழ்ந்து மக்கள் கூடியிருப்பதைக் கண்டு இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் து}தரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ஆதாரம்: நஸயீ

4) நபி(ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில் நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் ''நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்"" எனக் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ

5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும்(அதாவது நாலு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலு}ட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்;: நஸயீ

6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். ஆதாரம்: முஸ்லிம்

7) கோடைகாலத்தின் போது நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவுக்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபியவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலு}ட்டும் தாய், நோன்பு நோற்;க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்று அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும், நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலு}ட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலு}ட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதும் விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போல மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்புநோற்றுக் கொண்டு தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே நோன்பு மாதத்தில் எல்லாத் தவறுகளையும் விட்டுவிடுங்கள். ஆனால் இன்று நோன்பு காலத்தில்தான் நோன்பு நோற்றவர்கள் இரவெல்லாம் வீணாக விழித்திருந்து சுப்ஹ தொழுகையின்றி தூங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பகலையெல்லாம் தூக்கத்திலேயே கழித்து, தொழுகைகளை விட்டு விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமை யாக்கியது நாம் பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை விடுவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு தொழுகைகள் மற்றும் நல்அமல்களைச் செய்வதற்குத்தான் அல்லாஹ் அம்மாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். ஆகவே தவறுகளை முற்றாக விட்டு தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது எல்லா நல்அமல்களையும் செய்யுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா தவறுகளையும் முற்றாக விடுவதற்கு வாய்ப்பளிப்பானாக!

Saturday, August 6, 2011

கண்ணியமிக்க எனது சகோதரர்களே!

in படிப்பினை
கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?
    அதாவது, பெயர் ரீதியான அடிப்படையைத்தவிர வேறு எந்த வகையிலும் நமக்கும் மற்றவர்களுக்கு மிடையில் வேறுபாடு கிடையாது. இறைவனை அலட்சியம் செய்வது, இறையச்சமின்மை, இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமை முதலான செயல்களில் நாமும் அவர்களைப் போல் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றோம். திருக்குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்று நமக்கு தெரிந்த போதிலும், ஒரு நிராகரிப்பாளன் அந்த தெய்வ நூலுடன் எவ்வாறு நடந்து கொள்கிறானோ அதே போல்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.
    நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதர் என்று நமக்குத் தெரியும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாதவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட்டு விலகிச் செல்வதைப்போல் நாமும் அவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலகிச் செல்கிறோம்.
    பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும். லஞ்சம் கொடுப்பவனையும் வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும், வட்டி கொடுப்பவனையும் வட்டி வாங்குபவனையும் மிக மட்டமான குற்றவாளிகள் என்று அவன் தீர்ப்பு வழங்கியிருக்கிறான். புறம் பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது என்று தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறான். கெட்ட பேச்சு, வெட்கங்கெட்ட செயல், தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு என்று அவன் குறிப்பிட்டு இருக்கிறான்.
    இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும், இறைவனுடைய அச்சம் நமக்கு அறவே இல்லை என்பதைப்போல் நாம் இந்தச் செயல்கள் அனைத்தையும் மற்றவரைப் போல் தயங்காமல் தாராளமாகச் செய்கின்றோம். இதனால் ஏற்பட்ட விளைவு நாம் மற்றவரைக் காட்டிலும் கொஞ்சம் முஸ்லிமாக இருப்பதுபோல் காட்சி அளித்தாலும் நமக்கு அன்பளிப்பு கிடைக்க முடியாது; தண்டனைதான் கிடைக்கும். மற்றவர்கள் நம்மீது அதிகாரம் செலுத்துவது எல்லா வழிகளிலும் நம்மை அவர்கள் தாழ்த்துவது இதே குற்றத்தால் ஏற்ப்பட்ட விளைவுதான்! காரணம், இஸ்லாம் என்ற அருட்பேறு நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அதனை நாம் மதிக்கத் தவறிவிட்டோம்.
    திருக்குர்ஆனுடைய அறிவுரை என்ன, நபி (ஸல்) அவர்கள் போதித்த வழி என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பனவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக முடியாது. ஆனால் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், இந்த அறிவை அடைவதற்கு நீங்கள் சிந்திப்பதுகூட இல்லை. இதிலிருந்து நீங்கள் எத்துணைப் பெரிய அருட்பேற்றினை இழந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணராமல்தான் இருக்கிறீர்கள்.
    இறைவனுடைய நூல் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் தொழுகிறீர்கள். ஆனால் அந்தத் தொழுகையில் நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் ஒன்று உண்டா? இன்னும் சொல்லப்போனால் கலிமாவின் பொருள்கூட நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. அந்தக் கலிமாவை கூறியதுடன் உங்கள்மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கள் யாவை என்று நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.
    வயல் எரிந்து பொசுங்கிப் போனால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். வேலை கிடைக்காவிட்டால் என்னவாகும் என்று உங்களுக்கு தெரியும். உங்கள் உடமைக்கு பாதகம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் உங்களுக்குத் தெரியும். ஆனால், இஸ்லாத்தைப் பற்றித்தெரிந்து கொள்ளாமலிருப்பது எவ்வளவு பெரிய நஷ்டமென்று உங்களுக்குத் தெரியவில்லை! இந்த நஷ்டத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால் நீங்களாகவே வந்து “எங்களை யாரேனும் இதிலிருந்து காப்பாற்ற மாட்டார்களா? என்று கேட்பீர்கள். நீங்கள் இப்படி கேட்கும்போது இறைவன் நாடினால், இந்த நஷ்டத்திலுருந்து மீளுவதற்கு உரிய வழியும் பிறந்துவிடும்.

யஃஜூஜ்,மஃஜூஜ்,தஜ்ஜால்?


  அல்குர்ஆன் வழியில் அறிவியல்S.ஹழரத் அலி, ஜித்தா
    மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.
    அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.
    ஒரு வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் பார்ப்போம். அல்லாஹ்வின் நல்லடியார் துல்கர்னைன் பயணம் செய்கிறார். முதலில் சூரியன் மறையும் மேற்கு திசைக்கும் பின்பு சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பக்கம் செல்கிறார்.
    (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார். சூாியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீாில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ”துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்”" என்று நாம் கூறினோம்.
    (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; ”எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
    பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓாிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்ைைல. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
    அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”" (என்றார்).
    எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார். அல்குர்ஆன் 18:83-98
    யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் 21:96
    இப்படியான ஒரு சமுதாயம் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது. 21 நூற்றாண்டு அறிவியல் கண்களுக்கு இன்னும் அவர்கள் தென்படவில்லை. தடுப்புச் சுவரை துளைத்து, உடைத்து அவர்களை அல்லாஹ் வெளியேற்றும் பொழுது உலகம் அவர்களால் பெரிதும் துன்பப்படும். இந்த விசித்திர குள்ளர்கள் நாம் வாழும் உலகிலேயே எங்கோ மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
    ஃபுளோரஸ் தீவில் விசித்திர குள்ளர்கள்
    இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் Flores என்ற ஒரு தீவு உள்ளது. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.
    இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை (Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பாட்டி.
    இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.
    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.
    இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
    இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.
    முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்கலை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ
    இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.
    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர். ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573
     “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ
    கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயனம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம்
    இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்”
    துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில் இன்ஷா அல்லாஹ் இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்கலால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள். இவ்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி கவனிக்கத்தக்கது.
    (யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பாரத் தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரழி) நூல்:திர்மிதீ
    ஏழு ஆண்டுகள் விறகாக பயன்படுத்துமளவிற்கு அம்பாரக்கூடுகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தால் இக்கூட்டம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்தாலே இது சாத்தியம். மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் மூலம் அறியும்   யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில் இன்ஷா அல்லாஹ் வாழ்ந்து வரலாம். அல்லாஹ் அறிந்தவன். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
    ஃபித்னாக்கள் புறப்படும் திசை கீழ்த்திசை
    யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக்கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். தஜ்ஜாலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள். தஜ்ஜால் குழப்பவாதி, இனி புதிதாக பிறப்பவன் அல்ல. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கே என்ற கேள்விக்கு ஓரளவிற்கு ஹதீஸ்களில் பதில்கள் கிடைக்கவே செய்கின்றன.
    தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    வழிகெடுக்கக்கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக்கண்ணன், மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் கீழ்த்திஸையில் தோன்றுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அஹ்மத்
    நிராகரிப்பின் சிகரம் கீழ்த்திசையில் இருக்கிறது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஅத்தா
    நிச்சயமாக இப்லீஸுடைய அரியாசனம் கடலில் இருக்கிறது. எனவே அவன்தான் படையினரை (இப்புவியில் குழப்பன் உண்டு பண்ண) அனுப்புகிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: முஸ்லிம்
    அன்றைய அரபு மக்கள் தங்கள் வியாபாரத் தொடர்பாக தரை மார்க்கமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, மாலத்தீவு, இலங்கை, இந்தியா வரையிலும் சென்று வந்தனர். முன்பு கிருஸ்தவராக இருந்த தமீமுத்தாரி(ரழி) அவர்கள் இவ்வாறு 30 நபர்களுடன் புயலில் சிக்கி ஒரு தீபகற்பத்தில் கப்பலோடு ஒதுங்கினார். அப்பொழுது ‘ஜஸ்ஸாஸா’ என்ற ஒரு பிராணி அவர்களிடம் ‘நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்’ என்று கூறியது. அங்கு அவர்கள் ஒரு பருமனான மனிதனைக் கண்டார்கள். அவனைப்போன்று ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும், முட்டுக் கால்களுக்கும் இரும்பினால் தலை சேர்த்து கட்டப்பட்டிருந்தான். பின்பு அவன் சில கேள்விகள் கேட்டான். இறுதியில் “நான்தான் தஜ்ஜாலாவேன் (இங்கிருந்து) வெளியேற விரைவில் அனுமதி வழங்கப்படலாம்” என்று கூறியதாக தமீமுத்தாரி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள்
    இவ்விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: ஃபாத்திமா பிந்த் கைஸ்(ரழி) நூல்: முஸ்லிம்
    தஜ்ஜால் கடலில் உள்ள தீவுக்குள் தனி மடாலத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
    ஏமன் கடல் பகுதி. ஷாம் (சிரியா) கடல் பகுதி எல்லாம் மக்களால் அறியப்பட்ட பிரதேசங்கள். மேலும் இங்கு தீவுக்கூட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கிழக்குத் திசையின் கடல் பகுதிகளில் ஏராளமான தீவுகளும், தீபகற்பங்களும் உள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள மொத்த தீவுகள் 13667. இதில் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த காடுகள் உள்ள தீவுகள் மட்டும் 6000க்கும் மேல். அதைத் தொடர்ந்துள்ள நமது அந்தமான் தீவுக்கூட்டங்கள் மனிதர்கள் எவரும் வசிக்காத தீவுகள் 265. மாலத்தீவில் மொத்தம் 2000, மனித நடமாட்டம் உள்ள தீவுகள் 199 மட்டுமே. ஆக ஏராளமான தீவுகள் மனிதப் பார்வையில் படாமல் உள்ளன.
    தஜ்ஜால் வருகையின் முக்கிய நோக்கம், தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் கொள்ளச் செய்து நரகில் தள்ளுவது. தஜ்ஜாலின் மூலம் இறைவன் மூஃமின்களுக்கு ஏற்படுத்தும் சோதனை கடுமையாக இருக்கும். ஃபித்னாக்களுக்கும் சுனாமி பூகம்பம் போன்ற சோதனைகளும் இந்தோனேஷியா தீவுகளை சூழ்ந்துள்ளது. அல்லஹ்வின் சோதனைக்கு காரணம் பெயரளவுக்கு முஸ்லிம்களாகவும் செயல்களில் மாற்று மதத்தினராக மாறிவிட்டதுதான். நாம் நம்முடைய செயல்களை அல்லாஹ்விற்கு பொருத்தமான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்துகிறான். அறிவுள்ளவர் தெரிந்து கொள்ளவும் திருந்திக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.
    நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். அல்குர்ஆன் 41:53 
    அல்குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான ஹதீஸையும் ஒப்பிட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளார். இதன் மிகத்துல்லியமான உண்மை நிலையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
       
விசித்திர குள்ளர்களைப் பற்றிய சமீபத்திய ஆய்வுகளை சில இனையதளங்களில் காணலாம்.
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3960001.stm http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3948165.stm   http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4308751.stm

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites