திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Saturday, August 27, 2011

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: அமெரிக்க விஞ்ஞானி தகவல்


[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 01:40.39 பி.ப GMT ]
சிவப்பு கிரகம் என அழைக்கப்படுகிற செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக் கூடிய ஓக்சிஜன் பிராண வாயு இல்லை. இதனால் உயிரினங்கள் வாழ்வது என்பது இயலாது என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆனால் இந்தக் கருத்துக்கு மாறாக அமெரிக்க விஞ்ஞானி கிரெய்க் வென்டர் செவ்வாய் கிரகத்தில் செயற்கை உயிரினங்கள் வாழ முடியும் என அறிவித்து உள்ளார்.
தாம் செயற்கை உயிரிப் பொருளை உருவாக்கி உள்ளதாகவும், இந்த உயிரிப் பொருள் கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரிய மில வாயுவை எடுத்துக் கொண்டு உயிர் வாழும் எனவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிரகத்தில் 95 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயுதான் உள்ளது.
சர்சைக்குரிய உயிரியல் விஞ்ஞானி கிரெய்க் வென்டர் தமது குழுவினர் கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி உணவு, எரிபொருள் உற்பத்தி, பிளாஸ்டிக் தயாரிக்க செயற்கை செல்களை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
எக்சான் மொபில் நிறுவனத்துடன் இணைந்து மலிவான திறன் வாய்ந்த உயிரி உரு பொருளை உருவாக்கி கிரெய்க் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க் கிரகம் ரோமானியர்களின் யுத்த தேவதை ஆகும்.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites