[ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 04:04.16 மு.ப GMT ] |
அபோதாபாத்தில் உள்ள ஒசாமா பின்லேடனின் வீட்டில் விழுந்த அமெரிக்க ரகசிய உளவு விமானத்தை ஆராய்வதற்கு சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் மேலும் விரிசல்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்த வீட்டில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலின் போது அமெரிக்க உளவு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் வளாகத்தினுள் விழுந்தது. உளவு விமானங்களைக் கண்காணிக்கும் பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி இந்த உளவு விமானத்தின் உடல் பகுதியில் சில ரசாயனங்கள் பூசப்பட்டிருக்கும். அதனால் தாக்குதல் முடிந்த பின் விமானத்தின் அருகில் யாரையும் செல்லவிடக் கூடாது என அமெரிக்கா பாகிஸ்தானிடம் கோரியிருந்தது. ஆனால் அமெரிக்கா தன்னிடம் சொல்லாமலேயே பின்லேடன் கதையை முடித்து விட்ட கோபத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை ஆராய்வதற்கு சீனாவை அழைப்போம் என முன்பே கோடிட்டுக் காட்டியிருந்தது. சமீபத்தில் உளவு விமானத்தை நேரில் ஆராய்ந்த சீன அதிகாரிகள் அதன் உடல் பகுதியில் இருந்து சில மாதிரிகளை சேகரித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் கயானி ஆகியோர் மறுத்துள்ளனர். எனினும் இத்தகவல் உண்மை தான் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தி விட்டதாக சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீப காலமாக இருதரப்பு உறவிலும் ஏற்பட்ட விரிசலால் சீனா பக்கம் பாகிஸ்தான் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்கா உடனான உறவில் மேலும் விரிசலை உருவாக்கலாம். |
Monday, August 15, 2011
அமெரிக்காவின் ரகசிய உளவு விமானத்தை ஆராய சீனாவுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment