[ வெள்ளிக்கிழமை, 05 ஓகஸ்ட் 2011, 08:18.03 மு.ப GMT ] |
தனது பாவனையாளர்களின் தேவை கருதி சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருவது கூகுளின் வழக்கம். இந்நிலையில் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளதால் முஸ்லிம்களுக்கென கூகுள் தனது பிரதான சேவைகளில் ஒன்றான யூடியூப் காணொலிச் சேவையின் ஊடாகம் புதிய வசதியொன்றினை தற்போது வழங்கி வருகின்றது. முஸ்லிம்களின் புனிதத் தளமான மக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக யூடியூபினூடாக ஒளிபரப்பி வருகின்றது. இதன் மூலம் உலகின் எந்தமூலையில் இருந்தும் மேற்படி தொழுகைகளை முஸ்லிம் மக்கள் காணமுடியும். இது கூகுளினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அதிக விசேட ரமழான் பரிசாகக் கருதப்படுகின்றது. சவூதி அரேபியாவின் கலாச்சார அமைச்சகமும் இணைந்தே கூகுள் இச்சேவையினை வழங்கி வருகின்றது. மத்திய கிழக்கு நாடொன்றில் குறிப்பாக சவூதியில் இருந்து கூகுளினால் மேற்கொள்ளப்படும் நேரடி ஒளிபரப்பு இதுவென கூகுள் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதுமுள்ள சுமார் 2 பில்லியன் முஸ்லிம்களுக்கு, தினசரி ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் புனித காஃபா தொழுவதினை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இது எனவும் கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
Saturday, August 6, 2011
கூகுளின் ரமழான் பரிசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment