[ சனிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2011, 04:40.01 மு.ப GMT ] |
விளையாட்டுகளில் அதிக அளவு மக்கள் விரும்பி பயன்படுத்துவது பிளாஷ் விளையாட்டுகள் ஆகும். எந்தவித கோடிங் அறிவும் இல்லாமல் நம் விருப்பபடி எப்படி எல்லாம் வேண்டுமோ அப்படி எல்லாம் எளிதாக இதனை உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. அதிக அளவு இடம் பிடிக்காமல் எங்கும் பயன்படுத்த எளிதாக இருக்கும் பிளாஷ் குழந்தைகள் முதல் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. முன்பெல்லாம் பிளாஷ்-ல் ஒரு விளையாட்டு உருவாக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமக்கு பிளாஷ்-ன் அனைத்து விசயங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இனி பிளாஷ் மென்பொருள் துணையின்றியும் எந்த விதமான கோடிங் அறிவும் இல்லாமல் நாம் பிளாஷ் விளையாட்டுக்களை உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது. இத்தளத்திற்கு சென்று Download Now என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை எளிதாக நம் கணணியில் தறவிரக்கலாம். தரவிறக்கி இந்த மென்பொருளை இயக்கியதும் Help Center என்பதை சொடுக்கி மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். Create New Game என்பதை சொடுக்கி நாம் புதிய விளையாட்டு உருவாக்க ஆரம்பிக்கலாம். நாம் உருவாக்கும் விளையாட்டில் வைக்க இருக்கும் ஒவ்வொரு ஐகான் மற்றும் அதை சொடுக்கினால் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பதையும் நாமே எளிதாக உருவாக்கலாம். எல்லாம் உருவாக்கிய பின் Publish it என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய விளையாட்டை நாமே விளையாடி பார்க்கலாம். மாற்றங்கள் ஏதும் இருப்பின் சரி செய்யலாம். |
Friday, September 2, 2011
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment