திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Monday, September 19, 2011

பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதிகள்

Facebook தளம் என்பது இணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம்.
தற்போது பேஸ்புக்கில் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம்.
Friend Lists: இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான List க்குள் நாம் சேர்க்க வேண்டும்.
Facebook ஆனது Default ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைந்து உள்ளது என நினைத்துக் கொள்வோம். இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் Status மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் Listபக்கம் சென்று மாற்றலாம்.
இதே போல குறிப்பிட்ட list நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் Status செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.
Subscribe Option: இதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம். ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும்.
இதற்கு அவர்கள் subscribe என்பதை Activate செய்து இருக்க வேண்டும் அவ்வளவே. அவர்கள் Profile க்கு சென்று நீங்கள் subscribe செய்ய வேண்டும்.
நீங்கள் இதை activate செய்ய நினைத்தால்https://www.facebook.com/about/subscribe இங்கு செல்லவும்.
இன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் subscribe செய்துள்ளதாக இருக்கும். உங்களை யாரெல்லாம் subscribe செய்துள்ளார்கள் என்று உங்கள் Profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்திற்கு கீழ் உள்ள subscribers Button மூலம் அறியலாம்.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites