[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 07:45.59 மு.ப GMT ] |
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு கைத்தொலைபேசிகள் இருப்பதை காண முடிகிறது. ஒருசிலரை அவர்களின் கைத்தொலைபேசிகள் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள். அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் உள்ளது. இதற்கு கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதை நீங்கள் கணணியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம். இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன்பின் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் ரிங்டோனாக உருவாக்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுடைய ரிங்டோன் சேமிக்க வேண்டிய இடத்தை கேட்கும் அதை தேர்வு செய்து விட்டால் போதும், அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய ரிங்டோன் ரெடியாகிவிடும். |
Tuesday, September 13, 2011
கைத்தொலைபேசிகளுக்கு விதவிதமான ரிங்டோன்களை உருவாக்குவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment