[ சனிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2011, 05:00.47 மு.ப GMT ] |
றொரன்ரோவைச் சேர்ந்த விவரணப்படத் தயாரிப்பாளரான றொப் ஸ்பென்ஸ் என்பவர் தனது மற்றைய கண்ணினால் காட்சிகளைப் பதிகின்றார். இது மூளையுடனோ அவரது பார்வையுடனோ தொடர்புபடுத்தப்படவில்லை. புதிய வீடியோ விளையாட்டுத் தயாரிப்பாளர்களான Deus Ex எனும் நிறுவனத்தினருடன் இணைந்து செயற்பட்டு இப்புதிய கமெராக் கண்ணைப் பொருத்தியுள்ளார். 2027இல் உலகில் இவ்வாறான இயந்திரக் கண்களுடன் பலர் வீதிகளில் திரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருவியில் ஒரு கமெரா, கம்பியற்ற மாற்றி, மின்கலம் என்பன உள்ளடங்கின்றன. இவை றொப்பின் கட்கழிக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 9மி.மீ. மட்டுமே தேவைப்பட்டது. சிறுவயதில் ஒரு விளையாட்டின்போது தனது கண்ணை இழந்த றொப் 5 வருடங்களுக்கு முன்னர் கண்ணினையும் அகற்றியிருந்தார். இவரது கண்ணில் பொருத்தப்பட்டுள்ள கமெராவிலிருந்து காட்சிகள் ஒரு கையடக்கமான திரைக்கு மாற்றப்படுகின்றன. 3.2மி.மீ. சதுர அடியும் 328, 250 பிக்செல் கொண்டதுமான சிறியதொரு கமெரா கலிபோர்ணியாவின் OmniVision நிறுவனத்தினரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. |
Friday, September 2, 2011
பார்வையற்ற கண்ணால் படமெடுக்கும் விசித்திர மனிதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment