[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 07:50.47 மு.ப GMT ] |
கின்னஸ் சாதனை என்பது பெருமைக்குரிய விடயம் தான். ஆனால் இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் சக்சேனாவுக்கு அது வேதனை. உத்தர பிரதேசம் பரேலியை சேர்ந்தவர் மனோஜ். இவருடைய மனைவிக்கு குறை பிரசவத்தில் மகன் பிறந்தான். வாரிசு பிறந்த சந்தோஷத்தில் மருத்துவனைக்கு சென்ற மனோஜ் குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். குழந்தையின் ஒவ்வொரு காலிலும் 10 விரல்கள் இருந்தன. ஒவ்வொரு கைகளிலும் 7 விரல்கள் இருந்தன. மொத்தம் 34 விரல்களுடன் குழந்தை பிறந்திருந்தது. எடை குறைவாக பிறந்ததால் உடனடியாக ஓபரேஷன் மூலம் கூடுதல் விரல்களை அகற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். குழந்தைக்கு அக்ஷத் என்று பெயரிட்டு ஓராண்டாக வளர்த்து வருகிறார் மனோஜ். கால்களில் தலா 10 விரல்கள் இருப்பதால் குழந்தையால் நிற்க முடியவில்லை. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: இது மிகவும் அரிதான நோய். இதை பாலிடேக்டிலி என்று அழைப்பார்கள். பெரும்பாலும் பூனை, நாய்களை பாதிக்கக்கூடிய இந்நோய் மிக அரிதாகவே மனிதர்களையும் பாதிக்கிறது. இந்நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு கை, கால்களில் கூடுதலாக விரல்கள் இருக்கும். மற்ற உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை. குழந்தை பிறந்து ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டதால் இப்போது ஓபரேஷன் மூலம் கூடுதல் விரல்கள் அகற்றலாம். குழந்தை அக்ஷத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓபரேஷன் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரத்த குழாய்களில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். கால்களில் விரல்களை வெட்டி எடுக்கும் ஓபரேஷன் தானே என்று இதை சாதாரணமாக சொல்லி விடமுடியாது. ஏனெனில் குழந்தை அக்ஷத்துக்கு கைகளில் கட்டை விரலே இல்லை. கூடுதல் விரல்களில் இருந்து தான் கட்டை விரலை மருத்துவர்கள் உருவாக்க வேண்டும். இதனால் இந்த ஓபரேஷன் மருத்துவர்கள் கடுமையாகவே இருக்கும் என்கின்றனர். அதிக விரல்களுடன் பிறந்த குழந்தையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளான் அக்ஷத். |
Tuesday, July 26, 2011
34 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment