திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Wednesday, July 20, 2011

வேர்ட் டாக்குமெண்ட்டை பிடிஎப் (PDF) கோப்பாக மாற்றுவது எப்படி?


விண்டோஸ் எக்ஸ்பி (XP), விண்டோஸ் 2000 மற்றும் அதற்குக்கீழ் உள்ள பதிப்பு இயங்குதளத்தைப் (Operating System) பயன்படுத்துவோர்க்கு மட்டும்
பிடிஎப் உருவாக்கத்திற்கு பல கருவிகள் உள்ளன. நீங்கள் விரும்பியபடி அதற்கான கருவிகளைத் தேர்ந்தெடுக்கலாம். பிடிஎப் 995 (PDF 995) என்பது அத்தகைய ஒரு பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் கருவி
பிடிஎப் 995 ஓர் அறிமுகம்
  • பிடிஎப் 995 என்பது வேர்ட் டாக்குமெண்ட், எக்ஸல்,பிபிடி உள்ளிட்ட கோப்புகளை பிடிஎப் வடிவத்தில் மாற்றும் ஒரு பிடிஎப் உருவாக்கும் மென்பொருள்
கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மென்பொருளை நிறுவி உங்கள் கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றுங்கள்.
படி-1: PDF 995 என்ற மென்பொருளை டவுண்லோட் செய்ய.  (இங்கு கிளிக் செய்க)
படி-2: “Pdf995 2-Step Download” என்ற மெனுவில் உள்ள “PDF 995 Printer Driver (Version 9.2)” மற்றும் “Free Converter( Version 1.3)” ஆகியவற்றை டவுண்லோட் செய்யுங்கள்.
படி-3: இவ்விரண்டு மென்பொருள் செட்அப் (Setup) பைல்களையும் உங்கள் டெஸ்க்டாப்பில் சேமியுங்கள்.
படி-4: ஒவ்வொன்றயும் இயக்குங்கள்.
படி-5: ஏதேனும் ஒரு வேர்ட் டாக்குமெண்ட், எக்ஸல் அல்லது பிபிடி கோப்புகளைத் திறங்கள்.
படி-5: கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்ற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் >>File>> Print >> PDF Creator >> Ok>> Save
விண்டோஸ் 2007 பயன்படுத்துவோர்க்கு
படி-1: வேர்ட் டாக்குமெண்டை திறக்கவும்.
படி-2: திரையின் மத்தியில் உள்ள 'PDF' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
படி-3: பிடிஎப் வடிவில் சேமிக்க “Save as PDF” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites