சில நாட்களாக நம்முடைய சகோதரர்கள் பேஸ்புக், வலைப்பூக்கள், மின்னஞ்சல், பத்திரிக்கை வாயிலாக மற்ற இயக்கத்தவர்களீன் மீது பல்வேறு வகையானகுற்றச்சாட்டுகளும், அவதூறுகளை ஒருவர் மீது மற்றொருவர் கூறி வருவதை பார்த்து வருகிறோம். அதில் மிகவும் கவலைக்குரியமற்றும் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலம் இயக்கத்தை பின்பற்றி நடப்பவர்கள் என்று அறியும் போதுதான்.
பொதுவாக இன்று ஒரு இயக்கத்தில் உள்ள நாம் அடுத்த இயக்கத்தினரைப் பற்றி குறைச் சொல்வதை சர்க்கரைச் சாப்பிடுவதைப் போல் குறைக்கூறி வருகின்றோம்.அவர்கள் ஒரு நல்ல விசயம் செய்வதைக் கண்டால் அந்த நல்ல செயல்களை பாரட்டுவதற்கு கூட மனமின்றி அதில் எதாவது குறையைக் கண்டுபிடித்து அவர்களின் மனதை காயப்படுத்துகிறோம்,அவர்களின் வளர்ச்சினைக் கண்டால் அவர்களின் மீது பொறாமைக் கொண்டு அவர்களின் மீது அவதூறுகளைச் சுமத்துகிறோம்,நாம் மட்டும்தான் சத்தியத்தில் இருப்பதாக பெருமை அடித்து மற்றவர்களை இழிவாக கருதுகிறோம்,அவர்களுக்கு துன்பம் எதாவது ஒன்று நடந்துவிட்டால் அவர்களுக்கு உதவாமல் அதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.
சகோதரர்களே வெறுமனே பள்ளிவாசலுக்கு வந்து தொழுது விட்டு செல்லக்கூடியவர்களாகவும்,அல்-குர்ஆனையும்,ஹதீஸ்களை பேசுபவர்களாகவும், அல்-குர்ஆனையும் மற்றும் ஹதீஸ்களை வைத்து விவாதிக்க கூடியவர்களாகவும் நம்மை இஸ்லாம் உருவாக்க நினைக்க வில்லை.
இஸ்லாம் உருவாக்க நினைப்பதெல்லாம் பரிசுத்த இதயத்தை சுமந்த மனிதர்களைத்தான், அடுத்தவர்களுக்கு நல்லதை நினைக்கும் மனிதர்களாகவும்,அடுத்தவர்களின் மீது பொறாமைப்படாமலும்,அடுத்தவர்களின் மீது காழ்ப்புணர்வு கொள்ளாமலும், அடுத்தவர்களின் மீதுவஞ்சகப் படாமலும், அடுத்தவர்களின் மீது கோபப்படாமலும், அடுத்தவர்களை கேவலமாகக் கருதாமலும், பெருமையடிக்காமலும், மனிதனை மனிதனாகப் பார்த்து தன் சகோதரனாக நினைத்து வாழக்கூடிய மனிதர்களை உருவாக்குவதுதான் இஸ்லாத்தின் நோக்கமாக இருக்கிறது.
.
நபி (ஸல்) அவர்கள் இதைதான் சரியாகச் செய்தார்கள்,அவர்கள் உருவாக்கிய சமுதாயம் அல்லாஹ்வைப் பற்றி சொல்லக்கூடிய நேரத்தில்நடுங்ககூடிய இதயத்தை உடையவர்களாகவும்,அல்லாவின் வேத வசனங்கள் கேட்க கூடிய நேரத்தில் ஈமான் அதிகரிக்ககூடியவர்களாகவும்,மறுமை மற்றும் நரகத்தை பற்றிச் சொல்லக்கூடிய நேரத்தில் அழக்கூடிய இதயத்தைஉடையவர்களாகவும்,யாராவது தன் சகோதரனைப் பற்றி குறைச் சொல்லும் போது அதை தடுத்து நிறுத்தகூடியவர்களாகவும் இருந்தார்கள்.
இதனால் தான் நபி (ஸல்) அவர்களால் அன்றைய உலகிலேயே அரேபியாவில் தான் அதிகம் காணப்பட்ட விபச்சாரம் ,மது அருந்துதல், குடும்பப் பகையால் காலங் காலமாக ஒருக் குடும்பத்தின் மீது மற்றொரு குடும்பம் கொலைப் பழி வாங்கும் உணர்வு, காழ்ப்புணர்ச்சி, தற்பெருமைச் பேசி திரிவது, ஒரு கோத்திரத்தினர் அடுத்த கோத்திரத்தினரை கேவலமாக கருதுவது, பொறாமை, போன்ற செயல்களில் ஈடுபட்ட அந்த சமுதாயத்தினரை வெறும் 23 ஆண்டுகளில் உலகமே போற்றக்கூடிய ஒரு உன்னதமான சமுதாயமாக உருவாக்கிக் காட்டினார்கள்.
நம்மிடையே இன்று குர் ஆனும் , நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறை (ஹதீஸ்) இருக்கத்தான் செய்கிறது.ஆனால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய அந்த தூய சமுதாயத்தைப் போல் நம்மால் உருவாக்க முடியவில்லை.சகோதரர்களே இது உண்மையாகவே வெட்கப்படக்கூடிய மற்றும் வேதனைப்படக் கூடிய விஷயமாகும்.சகோதரர்களே இதைப் பற்றி சிந்திப்பது நம் மீது கடமையாகும். அந்த ஏக இறைவன் நம் அனைவருக்கும் உதவி அருள் புரிவானாக.
49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
No comments:
Post a Comment