[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 07:12.59 மு.ப GMT ] |
இதயத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைக்கு பிரிட்டனில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்த ஒரு நாளிலேயே அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச்சிறிய வயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையாக ரூடி மாக்ஸ்வெல் ஜோன்ஸ் உள்ளது. அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் ஒருவித பதட்டத்துடன் அந்த குழந்தையைப் பார்த்தனர். ஒருநாள் குழந்தை ரூடிக்கு ரத்த அழுத்தம் குறைந்து வருவதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தவிர்க்க முடியாத இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். குழந்தை பிறந்த இரண்டு வாரம் வரை இதய அறுவை சிகிச்சை செய்யும் போது பலவித பிரச்சனை ஏற்படும். இருப்பினும் குழந்தையின் அபாய நிலையைக் கருத்தில் கொண்டு மிக ஆபத்தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சை செய்த போது 20 மருத்துவ நிபுணர்கள் உடன் இருந்தனர். குழந்தை ரூடிக்கு இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்ததால் பிரசவ காலத்திற்கு மூன்று வாரம் முன்னதாகவே குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. |
Tuesday, July 26, 2011
பிறந்த ஒரே நாளேயான குழந்தைக்கு முதன் முறையாக இதய அறுவை சிகிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment