[ செவ்வாய்க்கிழமை, 26 யூலை 2011, 08:10.32 மு.ப GMT ] |
50 வயது தென் ஆப்பிரிக்க நபர் வாராந்த இறுதியில் மரணம் அடைந்தார். அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. சனிக்கிழமை இரவு முதல் துடிப்பு இல்லாமல் அந்த நபர் வீட்டில் கிடந்தார். இதனைத் தொடர்ந்து ஈஸ்டர்ன் கேப்பில் உள்ள லிபோடே கிராமத்தில் இருக்கும் தனியார் சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடல் 24 மணிநேரம் சவக்கிடங்கிலேயே இருந்தது. இந்த நேரத்தில் அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். இறந்து போன அவர் மீண்டும் உயிருடன் நடமாடுவதை பார்த்து உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் மீண்டும் உயிர் கிடைத்ததை எண்ணி அவர்கள் சந்தோசப்பட்டனர். அந்த நபரின் பெயரை மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. அந்த நபருக்கு நீர்சத்து இழப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறினர். இறந்துபோன நிலையில் கிடந்த நடுத்தர வயது நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சவக்கிடங்கு குளிர் தாங்க முடியாமல் ஓடி வந்துள்ளார். அவர் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதாக ஈஸ்டர்ன் கேப் சுகாதார செய்தித் தொடர்பாளர் சிவே கியூபெலோ கூறினார். |
Tuesday, July 26, 2011
இறந்து போன நபர் ஒரு நாள் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment