திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Tuesday, July 26, 2011

எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்


[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 02:36.56 பி.ப GMT ]
எதிர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்களை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தை பிறந்த 5 நிமிடத்தில் அதன் அறிவுத்திறனை கணித்து அதன் சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் மாணவர்களின் பள்ளி தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தில் ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம், தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இந்தச் சோதனையில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்த சேதனையை 1952 ஆம் ஆண்டு டொக்டர் விர்ஜினியா ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கி செயல்படுத்தினர்.
ஸ்வீடன் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வு முடிவு குறித்து விளக்கி உள்ளார்.
இந்த ஆய்வு கட்டுரை அடுத்த மாதம் வெளியாகும் குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் இதழில் வெளியாகிறது.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites